

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவிடம் ராக்கெட் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை நிறுத்தும்படி கூறின.
இதனை வடகொரிய அதிபர் கிம் ஏற்று கொள்ளவில்லை. இதனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வடகொரியா தனது சோதனையை மேற்கொண்டது.
இந்நிலையில், சர்வதேச அளவில் தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் சேர்த்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
டிரம்பின் இந்த முடிவை ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இன்று வரவேற்றுள்ளார். இதனால் வடகொரியாவுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.