வேலையின்மையை எதிர்கொள்ள புதிய பிரான்ஸ் அதிபருக்கு ஜெர்மன் உதவும் - அதிபர் மெர்கல்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு அதிபர் மக்ரானுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அந்நாட்டின் வேலையின்மையை எதிர்கொள்ள உதவி செய்ய உறுதியளித்தார்.
வேலையின்மையை எதிர்கொள்ள புதிய பிரான்ஸ் அதிபருக்கு ஜெர்மன் உதவும் - அதிபர் மெர்கல்
Published on

பெர்லின்

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்ததன்மையை மேம்படுத்த இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் மெர்கல் தெரிவித்தார். மக்ரான் இலட்சக்கணக்கான பிரெஞ்சு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அதே போல ஜெர்மனியிலும், ஐரோப்பா முழுவதிலும் ஆதரவினைப் பெற்றுள்ளார். அவர் துணிச்சலாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொண்டார், வெளிப்படையான உலகத்திற்காக குரல் கொடுக்கிறார், அத்தோடு சமத்துவ சந்தை பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க உறுதி பூண்டுள்ளார்.

பிரெஞ்சு-ஜெர்மன் ஒத்துழைப்பு என்பது ஜெர்மனியின் அயலுறவு கொள்கையின் முக்கியப் பகுதி. அதே சமயத்தில் மக்ரானின் வெற்றியினால் ஜெர்மன் தனது பொருளாதாரப் போக்கினை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவையில்லை என்றார் மெர்கல்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com