60 மில்லியன் மைல் தொலைவிற்கப்பால் செவ்வாயில் துளையிட்ட கியூரியாசிட்டி நாசா சாதனை

60 மில்லியன் மைல் தொலைவிற்கப்பால் செவ்வாய் கிரகத்தில் 2 அங்குல துளையிட்ட கியூரியாசிட்டி நாசா சாதனை. #NASA
60 மில்லியன் மைல் தொலைவிற்கப்பால் செவ்வாயில் துளையிட்ட கியூரியாசிட்டி நாசா சாதனை
Published on

வாஷிங்டன்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வருடமாக கியூரியாசிட்டி ரோவர் செய்வாய்க்கிரகத்தின் மேல் பகுதியில் சுற்றி திரிந்து வெர்றிகரமாக ஒரு பாறையை குடைந்து மண் மாதிரியை சேமித்து உள்ளது.

பாறைகள் துளையிட நவீன முறை பினபற்றபட்டது மற்றும் அதில் இருந்து மாதிரி பவுடர் சேகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த வார இறுதியில் பாறை பவுடர் மாதிரியை ரோவர் சோதனை செய்தது.

நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகம் (JPL) 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கியூரியாசிட்டி யின் மெக்கானிக்கல் பிரச்சனை இருந்தது என்பதால் அமெரிக்கா இந்த துளையிடல் தொழில்நுட்பத்தை சோதனை செய்து வந்தது.

இந்த தொழிநுட்பத்திற்கு நீட்டிக்கப்பட்ட துளையிடுதல் என பெயராகும். ஒரு மனிதர் வீட்டு ஒரு சுவரில் துளையிடுவது போல கியூரியாசிட்டி அதன் ரோபோ கவசத்தின் சக்தியை பயன்படுத்தி துளையிட்டது.

புதிய துளையிடும் நுட்பத்தைத் திட்டமிடுவதற்காக இந்த குழு பெரும் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தியது மற்றும் மற்ற கிரகங்களிலும் இதே தொழிநுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என கியூரியாசிட்டி திட்ட மேலாளர் (JPL) ஸ்டீவ் லீ, தெரிவித்து உள்ளார்.

60 மில்லியன் மைல் தொலைவில் அப்பால் 2 அங்குல துளையிடுவது சாதனை தான். இதன் முடிவு மிகவும் வெற்றிகரமானது என்று நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என கூறி உள்ளார்.

ரோவர் விண்கலத்தில் பாறை மற்றும் மண் மாதிரிகள் இரசாயன மற்றும் கனிம பகுப்பாய்வு நடத்த என இரண்டு ஆய்வகங்கள் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com