

பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.கடந்த 5 வருடங்களாக, செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி உள்ளது.
2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, புளோரிடாவில் உள்ள அமெரிக்க விமானப்படை நிலையமான கேப் கானேவாரில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி ரோவர் அனுப்பப்பட்டது. இதுவரை கியூரியாசிட்டி 350 மில்லியன் மைல் (560 மில்லியன் கி.மீ) பயணம் மேற்கொண்டு செவ்வாயில் இறங்கி உள்ளது. ஆகஸ்ட் 6, 2012 அன்று வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது.
முக்கியமான கம்ப்யூட்டரில் மர்மமான கோளாறு ஏற்பட்டதால் கியூரியாசிட்டி ரோவர் தனது ஆராய்ச்சிகளை தற்போது முழுவதுமாக நிறுத்தி உள்ளது. அதனால் அது செவ்வாயில் கண்டறிந்த தகவல்களை பூமிக்கு அனுப்புவதை நிறுத்தி உள்ளது. அங்கு ஏற்பட்ட புழுதி புயலில் கியூரியாசிட்டி காணமல் போனதாக கூறப்பட்டது. அதனிடம் இருந்து கடந்த 90 நாட்களுக்கு மேலாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்து சூரிய ஒளியை பயன்படுத்தி கிரகத்தைச் சுமார் 28 மைல்கள் சுற்றி வந்து உள்ளது.
செவ்வாயில் ஏற்பட்ட புழுதி புயலால் சூரிய ஒளி பேனல்களால் போதுமான சூரிய ஒளியைப் பெறும் சாத்தியம் இல்லாமல் போயிருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
கடந்த சில வாரங்களில் தூசி நிலைகள் செவ்வாய்கிரகத்தில் சரியாகி வருவதால், செப்டம்பர் 20 ம் தேதி இருப்பிடத்தை தெளிவாகப் புகைப்படம் எடுத்தது. நாசா மார்ஸ் ரீகனிஸ்ஸன்ஸ் ஆர்பிட்டர் (MRO). மேலே காட்டப்பட்டுள்ள செயற்கைக்கோள் படம், HiRISE என்று அழைக்கப்படும் MRO கருவியால் எடுக்கப்பட்டது.
படத்தில், ஒரு மலையின் சரிவுகளில் கிட்டத்தட்ட அடையாளம் தெரியாத சிவந்த பிரகாசமான ஸ்பாட் உள்ளது அதில் ரோவர் இருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
NASA இன் ஜெட் ப்ராபல்சன் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு முன்-பின்-படத்தில் ரோவர் தனது செயலை நிறுத்திவிட்டதை இன்னும் தெளிவாக காட்டுகிறது. சூறாவளி காரணமாக சுற்றுச்சூழல் மாறிவிட்டது என்பதை இது காட்டுகிறது.