”பிரதமர் மோடி மிகப்பெரும் தலைவர்”: இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகூ புகழாரம்

”பிரதமர் மோடி மிகப்பெரும் தலைவர்” என இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகூ புகழாரம் சூட்டினார். #Israel | #WelcomeNetanyahu
”பிரதமர் மோடி மிகப்பெரும் தலைவர்”: இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகூ புகழாரம்
Published on

புதுடெல்லி,

அரசு முறைப்பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ நேற்று இந்தியா வருகை தந்தார். இஸ்ரேல் பிரதமரை, பிரதமர் மோடி விமான நிலையம் வரை சென்று வரவேற்றார். டெல்லியில் இன்று பல்வேறு அரசு துறை சார்ந்த கூட்டங்களில் நேதன்யாகூ கலந்து கொள்கிறார். இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்திய பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்தியா டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகூ, பிரதமர் மோடி மிகப்பெரும் தலைவர் என்று வர்ணித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலுக்கும் ஆதரவளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளார். " இந்தியா அதன் சொந்த விருப்பங்களை தேர்வு செய்யட்டும். எனினும் பயங்கரவாதத்தை கையாள இரண்டு வழிகள் உள்ளன. உளவுத்தகவலின் அடிப்படையில் பயங்கரவாத செயலை தடுக்க வேண்டும் இரண்டாவது, கொலைகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நேதன்யாகூ.

இருப்பினும், சர்ஜிக்கல் தாக்குதலுக்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்களா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நேதன்யாகூ, நான் வெளியுறவுதுறை மந்திரியாகவோ அல்லது தூதரக அதிகாரியாகவோ ஆவதற்கு முயற்சிக்கிறேன் என பதிலளித்தார். மேலும், இந்திய பிரதமர் மோடி, மிகப்பெரும் தலைவர் எனவும், தனது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக கடுமையாக உழைக்கிறார் எனவும் தெரிவித்தார். #Israel | #WelcomeNetanyahu

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com