ஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ

ஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ
Published on

ஈரானிடம் பிடிபட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த இந்தியர்களின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஹர்முஷ் நீரிணையில் ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பலில் இந்தியர்கள் 18 பேர் இருந்தனர்.

அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் கப்பலிலேயே இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது. அவர்களை ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டும் என இந்தியா கோரியிருந்தது.

இந்நிலையில், கப்பலில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்டோரின் காட்சிகள் ஈரான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்களது ஒத்துழைப்புக்கு நன்றி என ஈரான் கடற்படை அதிகாரி தெரிவிப்பது போன்றும், அங்குள்ள இந்தியர்கள் உள்ளிட்ட மாலுமிகள் தங்களுக்கான உணவை தாங்களே வழக்கம்போல் தயாரிப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது.

லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஜூலை 24 ம் தேதி அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com