துபாயில் வைரலாகும் பிறை வடிவ ஏரியின் புகைப்படங்கள்

துபாய் அல் குத்ரா பாலைவன பகுதியில் பிறை வடிவத்தில் ஏரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
துபாயில் வைரலாகும் பிறை வடிவ ஏரியின் புகைப்படங்கள்
Published on

இந்த ஏரியை ஆளில்லா குட்டி விமானம் மூலம் துபாயை சேர்ந்த முஸ்தபா என்பவர் முதன் முதலாக படம் பிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோவில் பிறை வடிவத்தில் நட்சத்திரத்துடன் காணப்படுவதாக அந்த ஏரி அமைந்துள்ளது. அதனை சுற்றி புள்ளிகளாக மரங்கள் தெரிகின்றன.

ஏற்கனவே இந்த பகுதியில் லவ் லேக் என்ற பெயரில் இதய வடிவிலான ஏரி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அல் குத்ரா பகுதியை இயற்கை வன உயிரின பகுதியாக துபாய் அரசு அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 200 வகையான பறவையினங்கள் வசித்து வருகின்றன. பறவை ஆர்வலர்களுக்கு இது விருந்தளிக்கக்கூடிய இடமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிறை வடிவ ஏரி அருகே அரேபியா ஓரிக்ஸ் மான்களையும் கண்டு ரசிக்கலாம்.

தற்போது இந்த பிறை வடிவிலான ஏரியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் அந்த பகுதிக்கு செல்ல விருப்பம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். கூகுள் வரைபடத்தில் 24.7874218, 55.3065662 என்ற எண் குறியீடுகளை வைத்து அந்த ஏரி அமைந்துள்ள இடத்தை அறிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com