பாகிஸ்தான் விமான விபத்து... அதிர்ஷ்டவசமாக தப்பிய விமான பணிப்பெண்! எப்படி?

பாகிஸ்தானில் 97 பேர் உயிரிழந்த விமான விபத்து... அதிர்ஷ்டவசமாக தப்பிய விமான பணிப்பெண்!
பாகிஸ்தான் விமான விபத்து... அதிர்ஷ்டவசமாக தப்பிய விமான பணிப்பெண்! எப்படி?
Published on

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் சுமார் 97 பேர் உயிரிழந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானப் பணிப்பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று லாகூரில் இருந்து கராச்சி விமான நிலையத்தில் தரையிரங்க முற்பட்ட போது, எதிர்பாரதவிதமாக விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் உயிர் தப்பியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இந்த விமானத்தில் மதிகா இராம் என்பவர் பணிப்பெண்ணாக செல்ல வேண்டியது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குறித்த விமானத்தில் பணிப் பெண்ணாக வ் செல்லவிருந்தார். ஆனால், பணிப்பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக ஆனம் மசூத் என்ற பணிப் பெண் சென்றுள்ளார்.

இந்த விபத்தில் ஆனம் மசூத் உயிரிழந்தார். ஒரு வேளை பணிப் பட்டியலில் மாற்றம் செய்யப்படாமல் இருந்திருந்தால், குறித்த விமானத்தில் பணிப்பெண்ணாக மதிகா இராம் செல்ல வேண்டியிருந்திருக்கும், இவர் இந்த விபத்தில் சிக்கியிருப்பார்.அதிர்ஷ்டவசமாக இவர் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com