ஐரோப்பிய அகதிகள் விவகாரத்திற்கு ஜெர்மன் அதிபர் மெர்கலே காரணம் - போலந்து தலைவர் குற்றச்சாட்டு

போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி ஜெர்மன் அதிபர் மெர்கலே ஐரோப்பிய அகதிகள் பிரச்சினைக்கு காரணம் என்று கூறினார்.
ஐரோப்பிய அகதிகள் விவகாரத்திற்கு ஜெர்மன் அதிபர் மெர்கலே காரணம் - போலந்து தலைவர் குற்றச்சாட்டு
Published on

வார்சா

அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பகிர்ந்து கொள்வது பற்றிய விஷயத்திலேயே காசியின்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார். இதற்கு முன் அகதிகள் போலந்து நாட்டிற்கு நோய்களையும், கிருமிகளையும் கொண்டு வந்து விடுவர் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. அகதிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், சிலர் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர். தற்போது இவர்கள் க்ரீஸ்சிலும், இத்தாலியிலும் தங்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தலா 160,000 அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க ஓர் ஒப்பந்தத்தை 2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்திக் கொண்டன. ஆனால், அகதிகளுக்கு ஐரோப்பாவை நாங்கள் திறந்து வைக்கவில்லை; இதை மெர்கலே செய்துள்ளார். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஜெர்மனும், மெர்கலுமே பொறுப்பேற்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் காசியின்ஸ்கி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com