

காபூல்,
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏதுமறியாத பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான நீண்டகால போர், அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் பலனின்றி முடிவுக்கு வராமல் உள்ளது.
அந்நாட்டின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் ஷின்டன்ட் மாவட்டத்தில் போலீசாரை இலக்காக கொண்டு சாலையோர வெடிகுண்டு ஒன்று இன்று மதியம் வெடிக்க செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதவிர குண்டுவெடிப்பில் 2 போலீசாரும் காயமடைந்துள்ளனர். இதனை ஹெராத் மாகாண காவல் துறை செய்தி தொடர்பு அதிகாரி அப்துல் ஆஹாத் வாலிஜடா தெரிவித்து உள்ளார்.