அமெரிக்காவில் பாப் பாடகி வீட்டில் ரூ.2½ கோடி நகைகள் திருட்டு

அமெரிக்காவில் பாப் பாடகி வீட்டில் ரூ.2½ கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
அமெரிக்காவில் பாப் பாடகி வீட்டில் ரூ.2½ கோடி நகைகள் திருட்டு
Published on

வாஷிங்டன்,

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி இக்கி அசலியா. இவருக்கு அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் சொந்தமாக வீடு உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக அவர் இங்குதான் வசித்து வருகிறார். இக்கி அசலியாவின் காதலரும், பிரபல ராப் பாடகருமான பிளேபாய் கார்ட்டியும் அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு இக்கி அசலியா மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் இக்கி அசலியாவின் நகை பையை திருடி சென்றனர். அந்த பையில் 7 வைர மோதிரங்கள் உள்பட 3 லட்சத்து 66 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார். ரூ.2 கோடியே 62 லட்சத்து 76 ஆயிரம்) மதிப்புடைய ஆடம்பர நகைகள் இருந்தன.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இக்கி அசலியா மற்றும் பிளேபாய் கார்ட்டி இருவரும் இணைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com