

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை ராணுவம் கொண்டு ஒடுக்கும் பணியில் ஈடுபட்டது அரசு. இந்த சம்பவத்தில் 3 லட்சத்திற்கும் கூடுதலான பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரிய அரசுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதேபோன்று ரஷ்ய படையும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சிரியாவின் ஆல்பு கமல் நகரை சுற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்ய படை வான்வழி தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இதனை அமெரிக்க விமான படை தடுக்க முயற்சித்து உள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
உலக சமூகத்திற்காக சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக சமரசமில்லாத போரில் ஈடுபடுகிறோம் என தன்னை அமெரிக்கா காட்டி கொண்டாலும், உண்மையில் அந்நாடு ஐ.எஸ். அமைப்பினருக்கு பாதுகாவலாக இருந்து வருகிறது. இதற்கு உறுதியான சான்றுகள் உள்ளன என்று குற்றம் சாட்டியுள்ளது.