ஜமாலுக்கு நடந்ததுதான் உனக்கும் லண்டனில் இருக்கும் சமூக ஆர்வலரை மிரட்டும் சவுதி அரேபியா

இங்கிலாந்தில் இருக்கும் சவுதி அரேபியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தன்னை சவுதி பட்டத்து இளவரசரின் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக இங்கிலாந்து போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
படம் : neom
படம் : neom
Published on

லண்டன்

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், நியோம் என்ற மெகா சிட்டி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக நிலம் ஆக்கிரமிக்கும்போது, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஹோவிடட் என்னும் பழங்குடியினர் வாழ்ந்துவரும் தபுக் என்ற பகுதியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், அங்கு வாழ்வோரை அப்பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் தகவல்கள் வெளியாகின.அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது நிலத்தை விட்டுக்கொடுக்க மறுத்த பழங்குடியினரான அப்துல் ரஹீம் அல் ஹோவிடடி என்பவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தற்போது இங்கிலாந்தில் இருக்கும் சமூக ஆர்வலரான ஆல்யா அபுதயா அல்வைதி

என்பவர், ஹோவிடட் பழங்குடியினருக்கு தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்.அவர் இந்த விஷயத்தை உலகத்துக்கு தெரியப்படுத்திவிட்டதால் அவர் மீது கோபமடைந்துள்ள சவுதி பட்டத்து இளவரசரின் ஆதரவாளர்கள் அவரை மிரட்டுவதாக ஆல்யா தெரிவித்துள்ளார்.

தனக்கு தொலைபேசியிலும், டுவிட்டரிலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆல்யா, நீ லண்டனிலிருந்தாலும் உன்னை விடமாட்டோம், நீ பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறாய், அது உண்மையில்லை என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், சவுதி பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்ததுதான் உனக்கும் நடக்கும் என்றும் தான் மிரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com