

டாக்கா,
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து உள்ள கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டை இந்தியாவில் தயாரிப்பதற்கான அனுமதியை புனேயை தலைமையிடமாக கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் பெற்று உள்ளது.
இந்தநிலையில், தங்கள் நாட்டிற்கும் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து வழங்குவதற்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துடன் வங்காளதேசம் ஒப்பந்தம் செய்து உள்ளது.
இதன்படி வங்காளதேசத்திற்கு முதல் கட்டமாக ஒரு மாதத்திற்கு 50 லட்சம் டோஸ் வீதம் 6 மாதத்திற்கு 3 கோடி டோஸ் தடுப்பு மருந்தை அந்த நிறுவனம் வினியோகிக்க உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி சாகித் மாலிக் தெரிவித்தார்.