வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவி ஏற்பு

வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார்.
வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவி ஏற்பு
Published on

டாக்கா,

வங்காளதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசினா, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

வங்காளதேச நாடாளுமன்றத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் 30ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் அவாமி லீக் கட்சி, தேர்தல் நடந்த 299 இடங்களில் 288 இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா 4வது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு ஜனாதிபதி எம்.அப்துல் ஹமீது பதவி பிரமாணம் செய்துவைத்தார். மேலும் 46 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் 20 பேர் புதுமுகங்கள் ஆவர். விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com