ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிடாதீர்கள்; உலக நாடுகளுக்கு தலீபான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிடாதீர்கள்; உலக நாடுகளுக்கு தலீபான் எச்சரிக்கை
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான் பயங்கவராதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல் ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தலீபான்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்துள்ளது.

தலைநகர் காபூலில் நடைபெற்ற இஸ்லாமிய மதகுருக்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆப்கானிஸ்தானின் மூத்த மத தலைவர் மவுலாவி ஹெபதுலா அகுந்த்ஸாதா, "சுதந்திரமாக இல்லாமல் வளர்ச்சியடைய முடியாது. கடவுளுக்கு நன்றி, நாங்கள் இப்போது ஒரு சுதந்திர நாடாக இருக்கிறோம். எங்களுக்கு அவர்களின்(வெளிநாடுகள்) உத்தரவுகளை வழங்கக்கூடாது. இது எங்கள் அமைப்பு, எங்களுக்கு எங்கள் சொந்த முடிவுகள் உள்ளன" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com