அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல்: கத்தாருக்கு தொடர்பு? பரபரப்பை கிளப்பிய ஆவணப்படம்

2011ல் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் கத்தாருக்கு தொடர்பு இருந்ததாக ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல்: கத்தாருக்கு தொடர்பு? பரபரப்பை கிளப்பிய ஆவணப்படம்
Published on

தீவிரவாதத்துக்கு துணை போவதாக கூறி வளைகுடாவை சேர்ந்த 5 நாடுகள் கத்தார் நாட்டுடனான தூதரக உறவை முறித்துள்ளன.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதில் கத்தாருக்குத் தொடர்புள்ளதாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கத்தார் தி மன்ஹாட்டன் சாலை என்ற பெயரிலான ஆவணப்படத்தில் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்ப்பட்ட அல்குவைதா இயக்கத்தின் முக்கியத் தலைவர் காலீத் ஷேக் முகமதுவுக்கு கத்தார் தொடர்ந்து ஆதரவளித்து நிதியுதவி செய்துவந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 1999-ல் அமெரிக்கா புலனாய்வு படை காலீத்தை கைது செய்ய முயன்றதாகவும், கத்தார் அமைச்சர் அப்துல்லா பின் காலீத் அல்தானி அவரை ரகசியமாக தப்பச் செய்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

2001 செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு காலீத் ஷேக் தான் மூளையாக செயல்பட்டார்.

இதோடு அமைச்சர் அல்தானிக்கும் பயங்கரவாதி பின்லேடனுக்கும் தொடர்பு இருந்துள்ளது. என ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆவணப்படம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com