ரூ.360 கோடிக்கு ஏலம் போன அரியவகை வைரம்

தென்ஆப்பிரிக்காவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட வைரம் 360 கோடிக்கு ஏலம் போனது.
ரூ.360 கோடிக்கு ஏலம் போன அரியவகை வைரம்
Published on

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது. இதை கிறிஸ்டி, ஏல மையம் நடத்தியது. சுமார் 10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் ரூ.360 கோடிக்கு ஏலம் போனது. இது நீள் சதுரவடிவம் கொண்டது. பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது. இந்த வைரத்தை பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் ஒருவர் அதிக விலை கொடுத்து வாங்கினார். அவரின் பெயரை வெளியிட கிறிஸ்டி ஏல மையம் மறுத்து விட்டது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1920-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக வைரங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஆனால் இந்த வைரம் அரிய இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிப்பது தான் ஆச்சரியம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com