வம்பிழுத்த இந்திய வாலிபரை விரட்டி விரட்டி உதட்டை கடித்து எடுத்த பெண்

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் பெண்ணை வம்பிழுத்ததால், இந்திய இளைஞரின் உதட்டை கடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
வம்பிழுத்த இந்திய வாலிபரை விரட்டி விரட்டி உதட்டை கடித்து எடுத்த பெண்
Published on


இந்தியாவை சேர்ந்த சாஷாங்க் அகர்வால் தன்னுடைய நண்பர்களுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். மது அருந்தியிருந்த சாஷாங்க் தன்னுடைய நண்பர்களுடன் பட்டாயா பகுதியில் உள்ள தெரு ஒன்றில் அதிகாலை 4 மணிக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது பாலியல் தொழிலாளியான சுகன்யா பபேக் (38) என்ற பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து திடீரென அந்த பெண் சாஷாங்கை தாக்கி அவருடைய உதட்டினை கடிக்க ஆரம்பித்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றி இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, இருவரையும் பிரித்து விட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கீழ் உதடு பாதிக்கப்பட்டு ரத்தத்துடன் ஓடிவந்த சாஷாங்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லபட்ட சுகன்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவன் யார் என்றே எனக்கு தெரியாது. நான் என்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது தான் இருவரும் பேச ஆரம்பித்தோம். அப்பொழுது திடீரென அவர் என்னுடைய கையை பிடித்து இழுக்க ஆரம்பித்ததோடு, என்னுடைய கன்னத்தில் அறைந்தார். பிறகு என்னுடைய பாதுகாப்பிற்காகவே நானும் அவரை தாக்க ஆரம்பித்தேன். இதில் என் மீது எந்த தவறும் இல்லை என அந்த பெண் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com