இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு ஐ.நா. சபை ஆதரவு

உலகிலேயே மிகப்பெரிய இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நியூயார்க்,

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தை இந்தியா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் ஆகும். இதுவரை நாட்டில் 163 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இது குறித்து நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறியதாவது:-

இந்த நாள் வரையில் கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பு செய்திகள் மூலம் நாங்களும் எங்கள் கூட்டாளிகளும் இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களை சென்றடைந்துள்ளோம். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இது வலுவான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கூட திறனை மேம்படுத்துதல், பதில் அளிப்பு திட்டங்களை உருவாக்குதல், சுய பாதுகாப்பு கருவிகளை வாங்குதல், வினியோகித்தல், சுகாதாரபணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் உயிர் காக்கும் தகவல்களைப் பரப்புதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.13 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு இடர் தகவல் தொடர்புகளில் பயிற்சி அளித்து, ஒரு விரிவான இடர் தொடர்பு மற்றும் சமூக ஈடுபாடு உத்தியை உருவாக்க ஐ.நா. குழு பணியாற்றி உள்ளது.

இந்தியாவில் ஐ.நா.சபை குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ஷோம்பி ஷார்ப் தலைமையிலான ஐ.நா. குழு, கொரோனா பரவலைத்தடுக்க அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com