ஐநா: வட கொரியா குறித்து விவாதம் தேவை - அமெரிக்கா

ஐநா பாதுகாப்பு சபையின் அவசரக்கூட்டத்தை கூட்டும்படி அமெரிக்கா கோரியுள்ளது.
ஐநா: வட கொரியா குறித்து விவாதம் தேவை - அமெரிக்கா
Published on

ஐநா சபை

வட கொரியா தான் வெற்றிகரமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அமெரிக்கா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இவ்விஷயம் குறித்த விவாதம் புதன் கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா தரவுகளை ஆராய்ந்து வந்தாலும் கூட வட கொரியா சோதித்தது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று நம்புகிறது. இச்சோதனை வட கொரியாவின் ஏவுகணை ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாகும்.

அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஜூலை 4) நடத்தப்பட்ட இச்சோதனை இரு கட்டங்களாக பிரியும் வகையிலான ஏவுகணை என்று கூறப்படுகிறது. பெயர் குறிப்பிடாத இரு அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை கூறினர்.

அமெரிக்கா சோதிக்கப்பட்ட ஏவுகணை தொலைதூர வகையைச் சேர்ந்தது என்று கூறி வந்தாலும் அதிகாரபூர்வமாக அக்கூற்றை மறுத்து கருத்து எதையும் இதுவரை கூறவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com