இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு என்ன காரணம்? அதிர்ச்சி தகவல்கள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு என்ன காரணம் என்று தற்போது விவரம் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு என்ன காரணம்? அதிர்ச்சி தகவல்கள்
Published on

ஜகர்த்தா,

இந்தோனேசிய சுனாமி இந்த வருடத்தில் உலகத்தில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது. திடீர் என்று ஏற்பட்ட சுனாமி யாரும் நினைத்து பார்க்காத விளைவுகளை உருவாக்கி இருக்கிறது.

நேற்று அதிகாலை இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டது. இன்னும் அங்கு பல இடங்களில் கடல் நீர் வெளியே செல்லாமல் உள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்கள் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்து உள்ளது. இந்த சுனாமியில் 1000 பேர் காயமடைந்துள்ளனர். 800 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். அங்கு மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இரவில் வெடித்த கரகட்டாவ் எரிமலையால் அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது. சைல்ட் எரிமலை என்று இந்த கரகட்டாவ் எரிமலை அழைக்கப்படுகிறது. இது இந்த வருடம் முழுக்க அடிக்கடி வெடித்து வந்தது. சுனாமிக்கு முக்கிய காரணம் இதுதான்.

எரிமலை வெடித்த காரணத்தால் தான் இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நில அடுக்கு தடம் மாறியது. இதனால் ஏற்பட்ட அழுத்த மாறுபாடு காரணமாக சுனாமி ஏற்பட்டது என்று கூறினார்கள். இந்த எரிமலை வெடித்து சில நிமிடங்களில் சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது சுனாமிக்கு உண்மை காரணம் என்ன என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கரகட்டாவ் எரிமலையின் பெரும் பகுதி கடலில் விழுந்த காரணத்தால்தான் சுனாமி ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.

இது யுரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி சென்டினல் என்ற சாட்டிலைட் மூலம் (European Space Agency's Sentinel-1) கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆதாரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாகத்தான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட முடியவில்லை என்றும் கூறி இருக்கிறார்கள்.

இந்தோனேஷிசியாவின் அனாக் கரகட்டாவ் தீவில் எரிமலை வெடித்ததால், மேலும் ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com