

சிங்கப்பூர்
அமெரிக்கா- வடகொரியா இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்கான செலவுகளை சிங்கப்பூர் அரசுதான் பார்த்துக்கொள்கிறது. இந்த சந்திப்பால், சிங்கப்பூர் அரசுக்கு, சுமார் ரூ.101 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இரு நாட்டு தலைவர்களுக்காக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்துள்ள மதிய உணவு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு ட்ரம்ப்-கிம்ப் மற்றும் அதிகாரிகளுக்கு மதிய உணவு பரிமாறப்பட உள்ளதாம். சுவை மற்றும் ஆடம்பர லஞ்ச்சுக்கு சிங்கப்பூர் அரசு முக்கியத்துவம் தந்துள்ளது.
மதிய உணவு மெனுவில், ஸ்டார்டர்ஸ் (Starters) இதுதான்: பாரம்பரியமிக்க இரால் கோக்டெய்ல், அதனுடன் அவகடோ சலாட். பச்சை மாங்காய் கெரபு அதனுடன் ஹனி லைம் ட்ரெஸ்சிங் மற்றும் ஆக்டோபஸ். இது தவிர 'Oiseon' எனப்படும் கொரிய நாட்டின் புகழ்பெற்ற டிஷ் ஒன்றும் ஸ்டார்டராக பரிமாறப்படுகிறது. வெள்ளரிக்காயுடன், மாட்டிறைச்சி, காளான், முட்டை உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படுவது இது.
மெயின் கோர்ஸ் (Main course): ஃபீப் ஷார்ட் ரிப் கான்பிட் எனப்படும் ஒயின் ஊற்றி செய்யப்படும் உணவு, அவிக்கப்பட்ட பிரக்கோலியுடன் potato dauphinois, ரெட் வொயின் சாஸ், பன்றிக்கறியுடன் கூடிய Yangzhou ஃப்ரைட் ரைஸ், சில்லி சாஸ், Daegu jorim soy braised cod fish with radish, காய்கறிகள்.
சாப்பாட்டுக்கு பிந்தைய Desserts: டார்க் சாக்லெட் டார்ட்லெட் கனாசே, Haagendazs வென்னிலா ஐஸ்க்ரீம் மற்றும் செர்ரி கவுலிஸ் மற்றும் டிராபிஜின்னே. இவைதான் அந்த ராயல் சாப்பாடு லிஸ்ட்.