பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கினார்: சித்தராமையா பேச்சு

பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளார் என காங்கிரஸ் சிந்தனை கூட்டத்தில் சித்தராமையா பேசினார்.
பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கினார்: சித்தராமையா பேச்சு
Published on

பெங்களூரு:

பெங்களூருவில் தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முகாம் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றே தீர வேண்டும். குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த பா.ஜனதா மாநிலத்தின் பொருளாதாரத்தை காலி செய்துவிட்டது. நாட்டின் மொத்த கடன் ரூ.155 லட்சம் கோடி. இது கடந்த 2015-ம் ஆண்டு ரூ.53 லட்சம் கோடியாக இருந்தது. பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மீது ரூ.170 லட்சம் கடன் சுமை உள்ளது. கர்நாடக மாநிலத்தின் கடன் ரூ.5.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வால் மக்களிடம் பணம் இல்லை. ஆனால் நிறுவனங்கள் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. வரிகளை உயர்த்தி நடுத்தர மக்களிடம் இருந்து பணத்தை மத்திய அரசு பறிக்கிறது. கர்நாடகத்தில் பாடத்திட்டம் காவிமயம் ஆக்கப்படுகிறது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com