ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார்.
ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்தியா திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்த படத்தில் பாலிவுட் நடிகைகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசைமைக்கிறார்.

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். 1970-களில் ஸ்டூவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்னும் திருடனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் டைகர் நாகேஸ்வரராவ் எனும் கதாபாத்திரத்தில் ரவிதேஜா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.

தற்போது இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'டைகர் நாகேஸ்வரராவ்' திரைப்படம் வருகிற அக்டோபர் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் ரவி தேஜா, டைகர் நாகேஸ்வரராவின் தோற்றத்தில் நீராவி ரயில் மீது நின்றிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com