கடலில் மூழ்கிய விசைப்படகு

பழைய துறைமுகம் அருகே கடலில் மூழ்கிய விசைப்படகை ராட்சத கிரேன்கள் மூலம் மீட்டனா.
கடலில் மூழ்கிய விசைப்படகு
Published on

புதுச்சேரி

புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் தணிகைவேல். இவரது மனைவி பொற்கலை. இவர்களுக்கு சொந்தமாக விசைப்படகில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடல் சீற்றம் காரணமாக திசைமாறி தரைதட்டி படகு சேதமடைந்தது.

இதைத்தொடர்ந்து புதுவை பழைய துறைமுகம் கொண்டுவரப்பட்ட நிலையில் திடீரென்று படகு மூழ்க தொடங்கியது. உடனே அதில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினார்கள். படகை உடனடியாக மீட்கவும் முடியவில்லை.

இந்தநிலையில் விசைப்படகு கடலில் முழுமையாக மூழ்கியது. இந்த படகினை மீட்கும் பணியில் நேற்று 2 ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டன. அதன் மூலம் கயிறு கட்டி இருக்க முற்பட்டபோது கயிறு அடிக்கடி அறுந்து போனது.

மேலும் கிரேனும் மணலில் சிக்கியது. அதனை பொக்லைன் எந்திரம். கொண்டு வந்து மீட்டனர். தொடர்ந்து கடலில் மூழ்கிய படகினை மீட்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com