20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண சின்னசாமி மைதானத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண சின்னசாமி மைதானத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) தெரிவித்துள்ளது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காண சின்னசாமி மைதானத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

 பெங்களூரு:

பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக பி.எம்.டி.சி. சார்பில் சில பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி சின்னசாமி மைதானத்தில் இருந்து காடுகோடி பஸ் நிறுத்தம் (எச்.ஏ.எல்.ரோடு), காடுகோடி பஸ் நிலையம் (ஹூடி ரோடு), சர்ஜாபுரா, எலெக்ட்ரானிக் சிட்டி, பன்னரகட்டா, கெங்கேரி கே.எச்.பி. குடியிருப்பு, ஜனபிரியா டவுன்ஷிப், நெலமங்களா, எலகங்கா 5-வது ஸ்டேஜ், ஆர்.கே.ஹெக்டே நகர், பாகலூர், ஒசக்கோட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயங்குகிறது.

இவ்வாறு பி.எம்.டி.சி. கூறியுள்ளது.

இதுபோல மெட்ரோ ரெயில் சேவையும் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பையப்பனஹள்ளி, கெங்கேரி, நாகசந்திரா, சில்க் போர்டு ரெயில் நிலையங்களில் இருந்து இரவு 1 மணிக்கு புறப்படும் ரெயில்கள் 1.30 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா மெட்ரோ ரெயில் நிலையம் வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க காகித டிக்கெட்டை வினியோகிக்கவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com