38 வருடங்களுக்குப்பின்... ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த இந்திய ஜோடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் அடித்துள்ளனர்.
38 வருடங்களுக்குப்பின்... ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த இந்திய ஜோடி
Published on

பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. வேகத்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் அடித்தன.

இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை மிகுந்த கவனத்துடன் எதிர்கொண்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

ஆஸ்திரேலிய மண்ணில் 38 ஆண்டுகளுக்குப்பின் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரு தொடக்க ஆட்டக்காரர்களும் அரைசதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 1986-ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்ரீகாந்த் இந்த சாதனையை படைத்துள்ளனர். தற்போது கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளனர்.

ஒட்டு மொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 4-வது இந்திய ஜோடி என்ற சாதனையையும் படைத்துள்ளனர்.

தற்போது வரை இந்திய அணி 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 169 ரன்கள் அடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com