ஆண் குழந்தைக்கு தந்தையானார் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரகானே

ரகானே- ராதிகா தம்பதிக்கு இன்று 2-வது குழந்தை பிறந்துள்ளது.
Image Tweeted By @ajinkyarahane88
Image Tweeted By @ajinkyarahane88
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரகானே மற்றும் ராதிகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ரகானே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரகானே- ராதிகா தம்பதிக்கு ஏற்கனவே ஆர்யா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ள நிலையில் இன்று 2-வது குழந்தை பிறந்துள்ளது.

தனக்கு ஆண் குழந்தை பிறந்தது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரகானே வெளியிட்டுள்ள தகவலில், இன்று காலை நானும் எனது மனைவியும் அழகான ஒரு ஆண் குழந்தையினை இந்த உலகத்திற்கு வரவேற்றுள்ளோம். எனது மனைவி ராதிகாவும் எங்களது குழந்தையும் மிகவும் நலமாக உள்ளனர். உங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஹானே தெரிவித்த பிறகு, அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com