

சிட்னி,
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கொரோனா பாதிப்பு காரணமாக விலகிய டிராவிஸ் ஹெட்டுக்கு மாற்றாக உஸ்மான் கவாஜா களமிறக்கப்பட்டார். தனக்கென ஒரு வாய்ப்பு கிடைத்ததை சரியாக பயன்படுத்தி இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசினார் கவாஜா.
அவர் 206 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 103 ரன்களை திரட்டி தொடர்ந்து ஆடி வருகிறார்.