இந்தியாவுக்காக இனி டோனி ஆட விரும்ப மாட்டார்: ஹர்பஜன் சிங்

இந்தியாவுக்காக இனி டோனி ஆட விரும்ப மாட்டார் என இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக இனி டோனி ஆட விரும்ப மாட்டார்: ஹர்பஜன் சிங்
Published on

* சமூக வலைதள உரையாடலில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்து இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறுகையில், டோனி இந்திய அணிக்காக மீண்டும் விளையாட விரும்பமாட்டார் என்று கருதுகிறேன். ஆனால் ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார். இந்திய அணிக்காக அவர் விளையாடிய கடைசி போட்டி 2019-ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதி தான். நீல சீருடையில் இனி அவரை பார்ப்பது கடினமே என்றார்.

* சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் மறக்க முடியாத மிகச்சிறந்த இன்னிங்ஸ் எது என்று சில ஆட்டங்களை குறிப்பிட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் 1998-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் புழுதி புயலுக்கு மத்தியில் சூறாவளியாய் சுழன்றடித்து 143 ரன்கள் குவித்த இன்னிங்சும், 2003-ம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 98 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்ட இன்னிங்சும் இறுதிசுற்றுக்கு வந்தன. இரு இன்னிங்சுகளும் ரசிகர்கள் மத்தியில் ஏறக்குறைய சரிசம வரவேற்பை பெற்றிருந்தன. ஆனாலும் இறுதியில் 51 சதவீத ஆதரவுடன் சார்ஜா இன்னிங்ஸ் முதலிடத்தை தட்டிச் சென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com