ஐ.சி.சி.யின் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் கனவு அணியின் கேப்டனாக தோனி தேர்வு

ஐ.சி.சி.யின் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் கனவு அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஐ.சி.சி.யின் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் கனவு அணியின் கேப்டனாக தோனி தேர்வு
Published on

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தசாப்தங்களுக்கான (10 ஆண்டுகளுக்கான) ஆடவர் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஐ.சி.சி.யின் சர்வதேச இருபது ஓவர் கனவு அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்த பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய இந்திய வீரர்களும் கனவு அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய வீரர்கள் தவிர்த்து இந்த அணியில், உலக அளவிலான கிரிக்கெட் அணிகளின் வீரர்களான கிறிஸ் கெய்ல், ஏபி டீ வில்லியர்ஸ், ஆரோன் பின்ச் மற்றும் லசித் மலிங்கா உள்ளிட்டோரும் இடம் பெற்றிருக்கின்றனர்.

ரோகித் மற்றும் கெய்ல் தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 3வது இடத்தில் பின்ச் மற்றும் 4வது இடத்தில் விராட் கோலியும், 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே வில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்த அணியில் தோனி கேப்டனாகவும் மற்றும் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் தோனி 72 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு உள்ளார். அவற்றில் 41 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதேபோன்று ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் தோனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஐ.சி.சி.யின் டெஸ்ட் கனவு அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com