

புதுடெல்லி,
விஜய் ஹசாரே டிராபி போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியில் இடம் பெற்ற பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி 123 பந்துகளில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 183 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது சாதனையாக இருந்தது.
இதன்பின்னர் கடந்த 2012ம் ஆண்டில் டாக்காவில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 183 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற கோலி உதவினார்.
இதேபோன்று, தோனி மற்றும் விராட் கோலி சாதனையை பிரித்வி ஷா முறியடித்து விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணி அரையிறுதி செல்ல வழிநடத்தி இருந்துள்ளார்.
மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இல்லாத சூழலில், தொடக்க விக்கெட்டுக்கு பிரித்வி மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இணையானது 238 ரன்களை குவித்தது காலிறுதியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற உதவியது.
இந்த போட்டியில் யாஷஸ்வி 75 (104) ரன்கள் மற்றும் 21 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்களுடன் பிரித்வி ஷா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளனர்.