பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கானின் 8 ஆண்டு கால சாதனையை முறியடித்த சக வீரர்

பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கானின் 8 ஆண்டு கால சாதனையை சக வீரர் அபித் அலி ஜிம்பாப்வேயில் முறியடித்து உள்ளார்.
பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கானின் 8 ஆண்டு கால சாதனையை முறியடித்த சக வீரர்
Published on

ஹராரே,

ஜிம்பாப்வே நாட்டில் பாகிஸ்தான் அணி வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர்.

2வது டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் நடந்து வருகிறது. அதில், 2வது நாளில் பாகிஸ்தான் வீரர் அபித் அலி புதிய சாதனை படைத்து உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக இரட்டை சதம் (215) அடித்த அவர், ஜிம்பாப்வே நாட்டில் அதிக ரன்களை சேர்த்த பாகிஸ்தானிய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான யூனிஸ் கான் ஆட்டமிழக்காமல் 200 ரன்களை குவித்தது சாதனையாக இருந்தது. அதனை 8 ஆண்டுகள் கழித்து அபித் அலி முறியடித்து உள்ளார்.

கடந்த 1998ம் ஆண்டு முகமது வாசிம், ஹராரேவில் 192 ரன்களை எடுத்ததே அதற்கு முன் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com