முதல்தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை அமல்படுத்தப்படும் - கங்குலி தகவல்

முதல்தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை அமல்படுத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.
முதல்தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை அமல்படுத்தப்படும் - கங்குலி தகவல்
Published on

கொல்கத்தா,

இந்தியா-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இந்த திட்டத்துக்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு வங்காளதேசம் சம்மதம் தெரிவிக்கும். இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவருடன் பேசி இருக்கிறேன். அவர்கள் வீரர்களுடன் கலந்து பேசி இது குறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை கொண்டுவரப்படும். புதிய நிதி கமிட்டி இந்த ஒப்பந்த முறை குறித்து திட்டம் உருவாக்கும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com