சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஹசிம் அம்லா அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஹசிம் அம்லா அறிவிப்பு
Published on

டர்பன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஹசிம் அம்லா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான அம்லா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கினார்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா, 9282 ரன்களை சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 46.4 ஆகும்.

அதேபோல் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா, 8113 ரன்களை சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 49.46 ஆகும். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அம்லா விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com