ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து பிரண்டன் மெக்கல்லம் விலகல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கல்லம் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து பிரண்டன் மெக்கல்லம் விலகல்
Published on

அகமதபாத்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிரண்டன் மெக்கல்லம் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். தசைபிடிப்பால் அவதிப்படும் மெக்கல்லம் வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள மெக்கல்லம் 319 ரன்கள் எடுத்து இருந்தார். நடப்பு சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்றை எட்டியது. ஆனால், நடப்பு தொடரில் 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகள் மட்டுமே வெற்றி பெற்று தடுமாறி வருகிறது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், மெக்கல்லம் விலகியிருப்பது குஜராத் அணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com