

ஐதாராபாத்,
ஐதாராபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிர் ஆலம் இத்கா என்ற உள்ளூர் மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். ஒரே மைதானத்தில் பல குழுக்களாக பலர் இளைஞர்கள் விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது வாஜித் என்ற இளைஞர் கிரிக்கெட் விளையாடுகையில் கேட்ச் பிடிக்க ஓடிச்சென்றிருக்கிறார்.
அப்போது மைதானத்தில் விளையாடிய மற்றொரு அணியின் வீரர் மட்டையைச் சுழற்ற இவரது நெற்றியில் காயம் பட்டுள்ளது, இதில் நிலைகுலைந்த அந்த இளைஞர் அப்படியே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு உடனடியாக சக இளைஞர்கள் எடுத்துச் சென்றனர், அங்கு அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பஹத்புரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.