விசா கிடைப்பதில் தாமதம் ; சிஎஸ்கேவின் முதல் போட்டியில் மொயின் அலி விளையாடுவாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் வரும் 26-ஆம் தேதி அன்று கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை செய்கிறது.
Photo Credit: CSK
Photo Credit: CSK
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் மொயின் அலி, 15-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

மொயின் அலிக்கு விசா இன்னும் கிடைக்காததால், அவர் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை அணியின் முதல் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், மொயின் அலி இந்தியா வர அனுமதிக்கும் விசா அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் விரைவில் அவருக்கு விசா கிடைக்கும் என நம்புகிறோம்.

தேவையான அனைத்து ஆவணங்களும் அவரது தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவருக்கு விசா கிடைக்கவில்லை. அவருக்கு விசா கிடைத்ததும் இந்தியாவுக்கு வந்து விடுவார். அதனை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com