ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லிவிங்ஸ்டன் அதிரடி அரைசதம்..!

பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார் .
ஐபிஎல் : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லிவிங்ஸ்டன் அதிரடி அரைசதம்..!
Published on

மும்பை,

15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது .

பஞ்சாப் அணி தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் , லிவிங்ஸ்டன் சென்னை அணியின் பந்துவீச்சை பவுண்டரி ,சிக்ஸர்க்கு பறக்க விட்டார்.

முகேஷ் சௌத்ரியின் ஒரு ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 27 பந்துகளில் 5 சிக்ஸர் ,4 பவுண்டரி என அரைசதம் அடித்தார் .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com