தனது மகளுக்கு 'இவாரா' என பெயரிட்ட கே.எல்.ராகுல்.. பிரபலங்கள் வாழ்த்து

கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதியினருக்கு கடந்த மார்ச் 24-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
image courtesy:instagram/klrahul
image courtesy:instagram/klrahul
Published on

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல். ராகுல் தனது நீண்ட நாள் காதலியான இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியா ஷெட்டியை கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இவர்களுக்கு கடந்த மார்ச் 24-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் அறிவித்தனர்.

இந்நிலையில் கே.எல்.ராகுல் இன்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை மேலும் சிறப்பிக்கும் விதமாக தனது மகளின் பெயரை அறிவித்துள்ளனர்.

அதன்படி, தனது மகளுக்கு 'இவாரா' என பெயரிட்டுள்ளார். தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இதனை அறிவித்தனர்.

'இவாரா' என்பதற்கு 'கடவுளின் பரிசு' என்பது அர்த்தமாகும்.

View this post on Instagram

இதற்கு பல்வேறு திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com