21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார்- டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்

டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனி சிறந்த விக்கெட்கீப்பரில் ஒருவராக கருதப்படுகிறார் . டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 கேட்ச்களும், 38 ஸ்டெம்பிங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 123 ஸ்டெம்பிங்களும், 321 கேட்ச்களையும் பிடித்து அசத்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 57 கேட்ச்கள், 34 ஸ்டெம்பிங்களை இந்திய அணிக்காக செய்திருக்கிறார்.டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ;

டோனி விளையாடிய காலங்களில் 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார். இது பெரிய எண்ணிக்கையாகும்.டோனி ஒரு பெரிய பெயர். ஆனால் நான் புள்ளிவிவரங்களுடன் கூறினால், அவரது (கேட்ச்) தவறவிட்டது 21 சதவீதமாகும். எல்லோரும் கேட்ச் பிடித்த பட்டியலை பார்க்கிறார்கள். ஆனால் கைவிடப்பட்ட கேட்சுகளின் எண்ணிக்கை, தவறவிட்ட ஸ்டெம்பிங்கின் எண்ணிக்கை, தவறவிட்ட ரன்-அவுட்களை யாரும் கவனிப்பதில்லை.

கடந்த 15 ஆண்டுகளில் குயின்டன் டி காக் சிறந்தவர். அவர் மூன்று வடிவங்களிலும் கீப்பிங் மற்றும் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் ஒரு சிறந்த பினிஷராக இல்லை. ஆனால் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். அவருக்கு முன் மார்க் பவுச்சர் மற்றும் குமார் சங்கக்காரா சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தனர்.இவ்வாறு அவர்  கூறினார் .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com