

பெங்களூர்
11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 361 இந்தியர்கள் உட்பட 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.
முதல் வீரராக ஷிகர் தவான் ஏலம் விடப்படுகிறார்.ரூ 5.20 கோடிக்கு ஷிகர் தவானைஐதராபாத் அணி தக்கவைத்து கொண்டது.
அஸ்வின், கெயில், ஸ்டோக் உள்ளிட்டோரின் அடிப்படை ஏலத்தொகை ரூ. 2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சென்னை அணி ஏற்கனவே தக்கவைத்துள்ளது .
இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு போக வாய்ப்பு உள்ளது.
அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. சென்னை அணி அஸ்வினை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
கிறிஸ் கெய்ல் ஏலம் போகவில்லை. அவரை எந்த அணியும் கேட்கவில்லை.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பொல்லார்ட் ரூ5.40 கோடிக்கு டெல்லி அணி யால் ஏலம் எடுக்கபட்டார்.
இங்கிலாந்து வீரர் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக் ரூ.12. 5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கபட்டார். கடந்த முறை
ரஹானேவை ரூ.4 கோடிக்கு தக்கவைத்தது ராஜஸ்தான் அணி
1.60 கோடிக்கு டூபிளஸ்சியை தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
மிட்செல் ஸ்டார்க்கை ரூ. 9.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி
ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி
கொல்கத்தா அணி கேப்டனாக இருந்த கவுதம் கம்பீரை ரூ. 2.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி
ஆல்ரவுண்டர் டுவைன் பிரோவோவை ரூ.6.40 கோடிக்கு தக்கவைத்தது சென்னை அணி
அதிரடி வீரர் யுவராஜ் சிங்கை ரூ.2 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி.
பிராவோ, டூப்ளெஸிஸ், ஹர்பஜன் சிங் ஆகியோரை ஏலம் எடுத்தது சென்னை அணி
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன்னை ரூ.3 கோடிக்கு வாங்கியது ஐதராபாத் அணி
தமிழக வீரர் முரளி விஜய் ஏலம் போகவில்லை. அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
இந்திய அணியின் இளம் வீரர் கே.எல்.ராகுலை கடும் போட்டிக்கு நடுவே ரூ 11 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி..
ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஆரோன் ஃபின்ஞ்சை ரூ 6.2 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி
ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னை ரூ 9.6 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி
இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை ரூ 1.5 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி
நியூசிலாந்து அதிரடி வீரர் பிரண்டன் மெக்கல்லத்தை ரூ 3.6 கோடிக்கு வாங்கியது பெங்களூரு அணி
கருண் நாயரை பஞ்சாப் அணி ரூ.5.60 கோடிக்கு வாங்கியது
மணீஷ் பண்டே ஹைதராபாத் அணி ரூ. 11 கோடிக்கு வாங்கியது
நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்திலை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை
தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை
மார்ட்டின் குப்தில் -கிரிஸ் கெய்ல் - ஹசிம் ஆம்லா- ரூட்- ஆகியோர் விலைபோகவில்லை