ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு

கோப்புப்படம்
ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள்) போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய ஏ அணிக்கு ரஜத் படிதார் கேப்டனாகவும், 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணிக்கு திலக் வர்மா கேப்டனாகவும், ரஜத் படிதார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய ஏ அணி: ரஜத் படிதார் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யான்ஷ் ஷெட்ஜே, விப்ராஜ் நிஹாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்நீத் சிங், யுத்வீர் சிங், ரவி பிஷ்னோய், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, சிமர்ஜித் சிங்.
2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி: திலக் வர்மா (கேப்டன்), ரஜத் படிதார் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யான்ஷ் ஷெட்ஜே, விப்ராஜ் நிஹாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்நீத் சிங், யுத்வீர் சிங், ரவி பிஷ்னோய், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.






