ரஞ்சி கிரிக்கெட்: ரெயில்வே அணியை 76 ரன்னில் சுருட்டியது தமிழகம்

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், ரெயில்வே அணியை 76 ரன்னில் தமிழக அணி சுருட்டியது.
ரஞ்சி கிரிக்கெட்: ரெயில்வே அணியை 76 ரன்னில் சுருட்டியது தமிழகம்
Published on

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு- ரெயில்வே அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த ரெயில்வே அணி, தமிழக சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 39.1 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சவுரப் சிங் 22 ரன்கள் எடுத்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், சித்தார்த் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஆட்ட நேர முடிவில் 53 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் சதம் (100 ரன், 115 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். இது அவரது 100-வது ரஞ்சி ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சூர்யபிரகாஷ் (50 ரன், 7 பவுண்டரி), விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (5 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர். இதுவரை 160 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ள தமிழக அணி இன்று 2-வது நாளில் தொடர்ந்து விளையாடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com