"ரிஷப் பண்ட் அதிசயம் செய்யவில்லை, பந்துவீச்சாளர்களின் தவறால் சதம் அடித்தார்" - பாக். முன்னாள் வீரர் கருத்து

பண்ட் சதம் அடித்தது பந்துவீச்சாளர்களின் தவறு என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
Image Tweeted By @ICC 
Image Tweeted By @ICC 
Published on

பர்மிங்காம்,

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் சதம் அடித்து அசத்தினார். இன்று 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸ்சை விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடித்தது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப் கருத்து தெரிவித்துள்ளார். பண்ட் குறித்து அவர் பேசியதாவது :

பண்ட் சதம் அடித்தது முற்றிலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் தவறு. பண்ட் எந்த அதிசயமும் செய்யவில்லை. அவரது பேட்டிங்யில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளது. ஆனாலும் அவர் சதம் அடிக்க முடிந்தது, ஏனெனில் அவரது பலவீனமான பகுதிகளில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அவருக்கு பந்து வீசவில்லை.

நான் தனிநபர்களை பெயரிட மாட்டேன். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் நிறைய தவறுகளை செய்தனர். ஜடேஜா மற்றும் பண்ட் பேட்டிங் செய்யும் போது, அவர்கள் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளரைக் பௌலிங் செய்ய கொண்டு வந்தனர். அவர் அந்த நேரத்தில் பந்து வீச வந்தது சிறப்பானது அல்ல. நான் பண்ட்-க்கு எதிரானவன் அல்ல. ஆனால் எதிரணியின் இத்தகைய தவறான முடிவுகளால், நீங்கள் பெரிய ஸ்கோரைப் பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com