டி20 உலகக்கோப்பை; ரோகித்துடன் தொடக்க வீரராக கோலி களம் இறங்க வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மெல்போர்ன்,

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்..

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக கோலி களம் இறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூ டியூப் பக்கத்தில் கூறியதாவது,

விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்றால், அவர் ரோகித் சர்மாவுடன் பேட்டிங்கைத் தொடங்குவதைப் பார்க்க விரும்புகிறேன்.

கோலியை தொடக்க ஆட்டக்காரராக நிலைநிறுத்துவது, புதிய பந்திற்கு எதிரான அவரது திறமைகளைப் பயன்படுத்தி, பவர்பிளே ஓவர்களில் பீல்டிங் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, அவரது முழுத் திறனையும் வெளிப்படுத்த முடியும் .

ரோகித் அல்லது கோலி ஆகியோரில் ஒருவர் இன்னிங்ஸ் கடைசி வரை பேட்டிங் செய்தால், நீங்கள் சரியான நிலைத்தன்மையைப் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com