'லக்னோ அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிக்கிறேன்' - மார்க் வுட்

ஐ.பி.எல். வீரர்களில் மிகச்சிறந்தவர் என்று நிரூபிக்க விரும்புவதாக மார்க் வுட் தெரிவித்துள்ளார்.
'லக்னோ அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிக்கிறேன்' - மார்க் வுட்
Published on

லக்னோ,

இங்கிலாந்தின் அதிவேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ரூ.7 கோடிக்கு ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை அள்ளிய மார்க்வுட், சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான மோதலில் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த நிலையில் ஐ.பி.எல்.-ல் தனது இலக்கு என்ன என்பது குறித்து நேற்று பேட்டி அளித்த 33 வயதான மார்க்வுட் கூறுகையில், 'இங்கிலாந்து அணிக்காக 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் விளையாடி உள்ளேன். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சோபித்ததில்லை. 2018-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் ஆடிய ஒரே ஒரு ஆட்டத்திலும் (சென்னை அணிக்காக) எனது பந்து வீச்சு அடித்து (4 ஓவரில் 49 ரன்) நொறுக்கப்பட்டது.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அந்த சமயத்தில் போதிய அளவுக்கு நான் தயாராகவில்லை. இந்த தடவை ஐ.பி.எல்.-ல் எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். ஐ.பி.எல். வீரர்களில் மிகச்சிறந்தவர் என்று நிரூபிக்க விரும்புகிறேன். அத்துடன் என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஏலத்தில் எடுத்த லக்னோவுக்கு பிரதிபலனாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிக்கிறேன்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com