சிட்னி டெஸ்ட்: இரண்டாம் இன்னிங்சிலும் சதமடித்து கவாஜா அசத்தல்

உஸ்மான் கவாஜா சிட்னி டெஸ்டின் இரண்டாம் இன்னிங்சிலும் சதமடித்து அசத்தினார்.
சிட்னி டெஸ்ட்: இரண்டாம் இன்னிங்சிலும் சதமடித்து கவாஜா அசத்தல்
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காம் போட்டியானது சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேனான உஸ்மான் கவாஜா 137 ரன்களை விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த நிலையில் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் விளையாடி வரும் கவாஜா, அதிரடியாக விளையாடி சதமடித்து மீண்டும் தனது திறமையை நிரூபித்தார். அவர் 133 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் தனது சதத்தை நிறைவு செய்தார். தற்போது அவர் 101 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com