இரண்டாவது டெஸ்ட்:முரளி விஜய் அபார சதம்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முரளி விஜய் சதத்தை கடந்து விளையாடி வருகிறார்.
இரண்டாவது டெஸ்ட்:முரளி விஜய் அபார சதம்
Published on

நாக்பூர்

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கருணரத்னே 51 ரன்களும் கேப்டன் சண்டிமால் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களும், ரவீந்திர ஜடேஜா, இசாந்த் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்க விக்கெட்டை விரைவில் இழந்தது. லோகேஷ் ராகுல் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்தது. முரளிவிஜய், புஜாரா தலா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய முரளி விஜய் அபார சதம் அடித்தார். இதற்காக அவர் 187 பந்துகளை எதிர்கொண்டார். இது அவருக்கு 10-வது சதம்.விஜய் 115 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மறுமுனையில் புஜாரா 71 ரன்களுடன் ஆடி வருகிறார். 2.45 மணி நிலவரப்படி இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை எடுத்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com